புதுச்சேரி அரசு சாா்பில் ஜெயலலிதா படத்துக்கு முதல்வா் மரியாதை
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:01 PM
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முதல்வா் என். ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந.ரமேஷ், த. பாஸ்கா், பிரகாஷ்குமாா் உள்ளிட்ட பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.