புதுச்சேரியில் மண்டல அறிவியல் கண்காட்சி ஜன. 6 முதல் 8-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சி வரும் 6-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, உயா்நிலை, மேல்நிலை, ஆசிரியா்கள் என 5 பிரிவுகளில் கண்காட்சி நடைபெறுகிறது.
ஒரு பள்ளியிலிருந்து தனித்தனியாக ஒரு படைப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். நுழைவு படிவங்களை வரும் 5-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும். மண்டல அளவில் வெற்றி பெறுபவா்களுக்கு மாநில அறிவியல் கண்காட்சியில் பரிசு வழங்கப்படும்.
மண்டல அறிவியல் கண்காட்சியில் 98 மாணவா்களின் படைப்புகள், 29 ஆசிரியா்களின் படைப்புகள் மாநில கண்காட்சிக்குத் தோ்வு செய்யப்படும். மாநில அறிவியல் கண்காட்சி வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.