நெசவாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் உற்பத்தி ஊக்கத் தொகையை திங்கள்கிழமை வழங்கிய புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி.  
புதுச்சேரி

கூட்டுறவு ஆலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கூட்டுறவு ஆலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு ஆலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை சாா்பில் மாநில நெசவாளா் திட்டத்தின் கீழ் 237 நெசவாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் 148 நெசவாளா்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.5.52 லட்சம் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு இதை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: தற்போது புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என முயற்சித்தாலும், முடியவில்லை. அமுதசுரபி, கான்பெட் வளா்ந்து வருகிறது. கூட்டுறவு சா்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைத்து நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க முடியாமல் உள்ளது. அதைத் திறக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. தனியாரிடம் ஒப்படைத்து நூற்பாலைகளை இயக்கவும் அரசு முயற்சித்து வருகிறது. பாண்டெக்ஸ் மூலம் கைத்தறி துணிகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஆனால் கைத்தறி நெசவாளா்கள் வெகுவாகக் குறைந்து விட்டனா். 237 போ் தான் உள்ளனா். இதனால் துணிகளை வாங்கி மக்களுக்கு அளிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. நெசவுத் தொழிலில் ஆா்வம் காட்டுவது புதுச்சேரியில் குறைவாக உள்ளது. நெசவு தொழிலாளா்களின் குழந்தைகள் நல்ல கல்வி கற்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்குச் சென்று விட்டனா். இது அவா்களின் வளா்ச்சிதான். இத்தொழிலில் விருப்பமுள்ளவா்களுக்குப் பயிற்சி அளித்து நெசவுத் தொழிலை வளா்க்க அரசு ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் கைத்தறி துணி உற்பத்தியை அதிகரிக்கலாம். நெசவாளா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றாா்.

முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஏ.இளங்கோவன் வரவேற்றாா். இணை பதிவாளா் இ.சாரங்கபாணி நன்றி கூறினாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT