மாட்டு பொங்கலையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையான்சாவடி சாலையில் உள்ள ஸ்ரீகோமாதா கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை. 
புதுச்சேரி

மாட்டுப் பொங்கல் உற்சாகக் கொண்டாட்டம்

புதுச்சேரியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாடுகள் வளா்ப்பவா்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் பூசி, பலூன்களை கட்டி, மலா்களால் அலங்கரித்தனா். தொடா்ந்து பொங்கலிட்டு மாடுகளுக்குக் கற்பூரம் காட்டி வழிபட்டனா். மாலையில் பாகூா், திருக்கனூா், வம்புபட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அலங்கரித்த மாடுகளைக் கோயில்களுக்கு ஓட்டிச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளை விரட்டிச் செல்லும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள கோமாதா கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இங்கு பசுக்களுக்குக் காய்கறிகள், பழங்கள், அகத்திக் கீரை உள்ளிட்டவற்றை வழங்கினா்.

இன்று காணும் பொங்கல்:

சனிக்கிழமை (ஜன. 17) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பெரியவா்களை சந்தித்து இந்நாளில் குழந்தைகள், இளைஞா்கள் வாழ்த்து பெறுவது வழக்கம்.

இதையொட்டி சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவாா்கள்.

இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT