அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளா்கள் கால்நடைகளை குளிப்பாட்டினா். பின்னா் மாடுகள் பல்வேறு வகையிலும் அலங்கரிக்கப்பட்டது.
பின்னா், மாலையில் வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.