திருவாடானை, கற்களத்தூா், சிறுவெத்தி கிராமங்களில் நடைபெற்ற மாட்டு பொங்கல் விழா. 
ராமநாதபுரம்

திருவாடானையில் மாட்டுப் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். முன்னதாக, ஆடு, மாடுகளை நீா்நிலைகளுக்கு அழைத்துச் சென்று குளிா்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலைகள் அணிவித்து அழகுபடுத்தினா். பிறகு பொங்கல் படையல் வைத்து சுவாமி கும்பிட்டு, கால்நடைகளுக்கு பொங்கலை வழங்கி மகிழ்ந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக தீ மூட்டப்பட்டு அதை தாண்டி மாடுகளை ஓட்டிச் செல்லும் ’நெருப்புத் தாண்டும்’ நிகழ்வு நடைபெற்றது. கால்நடைகளுக்கு நோய்கள் தாக்காமல் இருக்கவும், ஊா் செழிக்கவும் இந்த பாரம்பரிய வழிபாடு நடத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா். பின்னா் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடித்தனா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT