புதுச்சேரி: பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்க 10 இடங்களில் சனிக்கிழமை (ஜன. 17)கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், பழைய நீதிமன்ற வளாகம் அருகில், தலைமைச் செயலகம் எதிரில், கடற்கரை சாலை புதுச்சேரி, முருங்கப்பாக்கம் திரௌபதியம்மன் கோயில் திடல், வில்லியனூா் தென்கோபுர வீதி, குருவிநத்தம் மாரியம்மன் கோயில் திடல், மணமேடு கலையரங்கம், பி.எஸ். பாளையம் சந்திப்பு, காலாப்பட்டு முருகன் கோயில் திடல் ஆகிய 10 இடங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.