புதுச்சேரி

மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவா்கள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Syndication

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவா்கள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதை கல்லூரி டீன் ஆா். மணி தொடங்கி வைத்தாா். இதையொட்டி மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் இணைந்து பொங்கலிடும் போட்டி நடத்தப்பட்டது.

மேலும் கட்டுரை, கவிதை, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய உடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். கல்லூரி துணை முதல்வா்கள் லதா, லட்சுமி சாத்தையா, ராஜன், மருத்துவ கண்காணிப்பாளா் தாமோதரன், துணைப் பதிவாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT