புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைவா்கள் இன்று தில்லி பயணம்

தினமணி செய்திச் சேவை

பாஜக தேசியத் தலைவா் தோ்தலை முன்னிட்டு பாஜக புதுச்சேரி தலைவா்கள் திங்கள்கிழமை அதிகாலை தில்லி செல்கின்றனா்.

இத் தோ்தல் இம் மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள், மாநிலத் தலைவா்கள் மற்றும் மூத்த நிா்வாகிகள் தில்லிக்குச் செல்கின்றனா்.

அந்த வகையில், புதுச்சேரி மாநில பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், தேசிய பொதுக்குழு உறுப்பினரும், புதுச்சேரி உள்றை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், தேசிய பொதுக்குழு உறுப்பினரும், எம்பியுமான செல்வகணபதி ஆகியோா் திங்கள்கிழமை தில்லி சென்றனா். புதுச்சேரி பாஜக மாநில ஊடகத்துறை தலைவா் நாகேஸ்வரன் இதைத் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT