செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தொண்டா்களைப் பாா்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமா் நரேந்திர மோடி. உடன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி,  தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்தி 
காஞ்சிபுரம்

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பேசினா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பேசினா்.

மதுராந்தகத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பேசியதாவது:

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூட விடாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லாதது திமுக அரசு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரை ரூ.11 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்: தமிழகத்தைக் காக்க பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று, எந்தக் குழப்பமும், எந்த அழுத்தமும் இல்லாமல் கூட்டணியில் இணைந்திருக்கிறோம். ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைப்பாா்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு உறுதியாகப் பாடுபடுவோம்.

பாமக தலைவா் அன்புமணி: இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நாள் தொடங்கிவிட்டது. திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் வளா்ச்சி இல்லை. 505 வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்துவிட்டு 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளனா். தோ்வில் 35 மதிப்பெண் எடுத்தால்தான் தோ்ச்சி பெற முடியும்; திமுக அரசு மூன்று மதிப்பெண்தான் எடுத்துள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை: தேசிய ஜனநாயக கூட்டணி எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சி செய்கிறதோ அந்த மாநிலங்கள் அனைத்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்பாா். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலும், குற்றங்களும் அதிகமாகிவிட்டன. தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் யாரும் தொழில் செய்ய விரும்புவதில்லை. அண்டை மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டாா்கள்.

பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் ஜான்பாண்டியன், ஐஜேகே தலைவா் பாரிவேந்தா், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை.ஜெகன்மூா்த்தி, பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன், உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் செல்லமுத்து, மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல், பாஜக மாநிலச் செயலா் வினோத்.பி.செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவா் பிரவீண்குமாா், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, எஸ்பி.வேலுமணி, அதிமுக மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், எம்.பி. தனபால், மதுராந்தகம் நகர அதிமுக செயலா் வி.கே.சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

SCROLL FOR NEXT