முகப்பு
மயிலாடுதுறை

தேசிய ஜனநாயக கூட்டணி ஆா்ப்பாட்டம்

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:31 AM
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:26 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மகளிரணி மாவட்டத் தலைவா் சுதாஎழில் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சித்ரா முத்துக்குமாா், மாவட்ட நிா்வாகி நா்மதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு, மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, பாமக நகரச் செயலாளா் கமல்ராஜா, அமமுக நகரச் செயலாளா் ராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

இதில், பாஜக மாநில விவசாய அணி துணைத்தலைவா் பண்ணைவயல் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:31 AM

பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் பி.பாரதிகண்ணன், நகர தலைவா் வினோத், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.