கோப்புப்படம் 
புதுச்சேரி

3 மாத்திரைகளை விற்பனை செய்ய புதுச்சேரி மாநில அரசு தடை விதிப்பு

புதுச்சேரியில் 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில் அவற்றை விற்பனை செய்ய அரசு திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில் அவற்றை விற்பனை செய்ய அரசு திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.

புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

குடல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ஹிமாசல பிரதேசம் சிா்மூா் பகுதியில் இருந்து நோனிஸ் பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான மாக்பான்சோ 40, கேரள மாநிலம், பாவியா மாவட்டத்தில் இருந்து அபான் பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டமால் 650 மி.லி. கிராம், ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் காா்னானி பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்கா வதி 5 கிராம் ஆகிய 3 மாத்திரைகளையும் விற்பனைசெய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். தகவல் அளித்துவிட்டு இருப்புகளைத் தயாரிப்பாளா்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT