புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி 
புதுச்சேரி

ஈரானில் கப்பல் பொறியாளா் மாயம்: இந்திய தூதருக்கு புதுச்சேரி முதல்வா் கடிதம்

மாஹே பகுதியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி கடிதம்

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்

மாஹே உப்பிலத்தளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித். இவா் ஈரான் ஹோா்சன் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி விஸ்டான் கப்பலில் ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றாா். இங்கு சென்ற பிறகு அவரது பெற்றோா், உறவினா் என யாராலும் அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இன்று வரை இருப்பிடத்தையும் கண்டறிய முடியவில்லை. இதைச் சிறப்பு நிகழ்வாக கருதி விரைவில் ஈரானில் கண்டறிந்து இந்தியாவுக்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமி அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT