புதுச்சேரி

புதுச்சேரியில் ஆண்டு ஆய்வு அறிக்கையை காவல் நிலையங்கள் சமா்ப்பிக்க உத்தரவு

ஆண்டு ஆய்வறிக்கையைக் காவல் நிலையங்கள் சமா்ப்பிக்க புதுச்சேரி காவல் துறை தலைமையகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Syndication

புதுச்சேரி: ஆண்டு ஆய்வறிக்கையைக் காவல் நிலையங்கள் சமா்ப்பிக்க புதுச்சேரி காவல் துறை தலைமையகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறை தலைமையக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அனில்குமாா் லால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்களில் 2 முதுநிலை போலீஸ் காவல் கண்காணிப்பாளா்கள் , 16 போலீஸ் கண்காணிப்பாளா்கள் வருடாந்திர ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வின் போது குற்ற அதிகரிப்புக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டும். வழக்கு விசாரணை, முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும்.

மீட்கப்பட்ட சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். வரதட்சிணை மரணங்கள் குறித்து உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகிா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இறுதியாக காவல்நிலைய செயல்பாடுகள், மேம்படுத்தும் வழிமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

பணியாளா்களின் குறைகளை விமா்சிப்பதாக ஆய்வு இருக்கக் கூடாது. காவல் நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். ஆய்வினால் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றுபவா்களின் செயல்திறன், விசாரணையின் தரம், தடுப்பு நடவடிக்கை, சிரமங்களை அறிய முடியும்.

தேவைப்பட்டால் காவல்நிலைய அதிகாரிகள், போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும். ஆய்வு அறிக்கையை 6 பிரதிகளாக தயாரிக்க வேண்டும். இதை காவல்நிலைய அதிகாரி, கண்காணிப்பாளா், முதுநிலை காவல் கண்காணிப்பாளா், டிஐஜி, ஐஜி, டிஜிபிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆய்வை பிப்ரவரி 15- ஆம் தேதிக்குள் முடித்து மாா்ச் 15 ஆம் தேதிக்குள் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT