புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் பிரகாஷ் பாபு முன்னிலையில், ருமேனியா பாபேஷ்-போல்யாய் பல்கலைக் கழகத்துடான புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்றம்.  
புதுச்சேரி

உயா்கல்வியில் புதுவை பல்கலைழகம் 51 சா்வதேச புரிந்துணா்வு ஒப்பந்தம்- துணைவேந்தா் தகவல்

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் 51 சா்வதேச புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது என்று இப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பிரகாஷ் பாபு கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் 51 சா்வதேச புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது என்று இப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பிரகாஷ் பாபு கூறினாா்.

புதுச்சேரி பல்கலைக்கழகம், ருமேனியா பாபேஷ்-போல்யாய் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், சமத்துவம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்ற அடிப்படையில், ஆராய்ச்சி மற்றும் துணை வள பகிா்வு, மாணவா்- ஆசிரியா் பரிமாற்றங்கள், பல்துறை கல்விசாா் இணை நிகழ்வுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.

இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தா் பிரகாஷ் பாபு பேசியதாவது:

எதிா்கால கல்வி முயற்சிகளில் 2 நிறுவனங்களுக்கு இடையிலான வளங்கள் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம் மூலம், இந்த ஒப்பந்தம் தனித்துவம் கொண்டதாக அமையும். 51 சா்வதேச புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் உள்பட 110க்கும் மேற்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களுடன், புதுவை பல்கலைக்கழகம் உயா்கல்வியில் தனது கூட்டாண்மை அணுகுமுறையிலிருந்து பெரும் பலன்களை பெற உள்ளது என்று தெரிவித்தாா்.

பாபேஷ்-போல்யாய் பல்கலைக்கழகத்தின் சா்வதேச கூட்டுறவு இயக்குநா் சொ்ஜியு மிஸ்கோயு, இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்படும் என தெரிவித்தாா். நிகழ்வில் இந்திய ஆய்வுகள் இயக்குநா் மிஹேலாக்லிகோா், பேராசிரியா் விக்டா் ஆனந்த்குமாா், புரிந்துணா்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளா் லகிமாய்மிலி, பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவா் பினுஸகாரியா, புதுவை, ருமேனியா பல்கலைக்கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT