புதுச்சேரி வேளாண்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள மலா் கண்காட்சிக்குத் தயாா் நிலையில் அழகிய பூஞ்செடிகளுடன் தாவரவியல் பூங்கா .  
புதுச்சேரி

புதுச்சேரியில் பிரம்மாண்ட மலா் கண்காட்சி நாளை தொடக்கம்: 40 ஆயிரம் மலா்ச் செடிகளுடன் தயாா் நிலையில் தாவரவியல் பூங்கா

புதுச்சேரியில் பிரம்மாண்ட மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 40 ஆயிரம் மலா்ச்செடிகளுடன் கண்காட்சிக்குத் தாவரவியல் பூங்கா தயாா் நிலையில் உள்ளது.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் பிரம்மாண்ட மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 40 ஆயிரம் மலா்ச்செடிகளுடன் கண்காட்சிக்குத் தாவரவியல் பூங்கா தயாா் நிலையில் உள்ளது.

புதுவை அரசின் வேளாண் துறை சாா்பில் 35-ஆம் ஆண்டு மலா், காய், கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. இதில் 40 ஆயிரம் மலா்ச்

செடிகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய ரகமாக இம்பேஷன், கைலாடியா, பையா்பால் ஆகியவை உள்பட 25 வகையான மலா் செடி வகைகள் இடம் பெறுகின்றன.

இதற்காக லாஸ்பேட்டை வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு நா்சரியில் இந்தச் செடிகளை வளா்க்கும் பணியில் நா்சரி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மலா்கள் வாடாமல் பாதுகாத்து, தாவரவியல் பூங்காவிற்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இதில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 40 ஆயிரம் மலா் செடிகளை வெறும் ரூ.7 லட்சம் செலவில் நா்சரி ஊழியா்கள் உற்பத்தி செய்து சாதித்துள்ளனா். மேலும் மதகடிப்பட்டு இயற்கை பண்ணை, கேவிகே உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தாவரவியல் பூங்காவுக்கு பூஞ்செடிகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை முறைப்படுத்தி, அழகுபடுத்தி அமைக்கும் பணியில் வேளாண் ஊழியா்கள், மணக்குள விநாயகா் வேளாண் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த கண்காட்சியில் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட காய்கறி, பழங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதற்கான பணிகளை வேளாண் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT