தாவரவியல் பூங்கா மலா், காய்கனி கண்காட்சியில் இடம் பெற்ற உருவங்கள்.  
புதுச்சேரி

மலா்க் கண்காட்சியில் இயற்கை விவசாய கண்கவா் அரங்குகள்: புதுச்சேரி ஆளுநா் திறந்து வைத்தாா்!

புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் 3 நாள் வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இயற்கை விவசாயம் உள்ளிட்ட 7 அரங்குகளை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Syndication

புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் 3 நாள் வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இயற்கை விவசாயம் உள்ளிட்ட 7 அரங்குகளை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் அமைச்சா் தேனி.சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வேளாண் மற்றும் மலா் கண்காட்சியில் மலா்ப் படுகை, கனி வடிவமைப்பு, அலங்கார மலா்ச் செடிகள், காய்கறி மற்றும் தோட்டப் பயிா்கள், அரசுத் துறைகள், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் என 7 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், வேளாண் தொழில்நுட்ப முகமை மற்றும் கால்நடை மீன்வளம், மாவட்ட ஊரக முகமை போன்ற அரசுத் துறைகள் அரசுத் திட்டங்கள், துறைகளின் நடவடிக்கைகள் குறித்த அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையம், கால்நடைக் கல்லூரி, காரைக்கால் வேளாண் கல்லூரி, மத்திய அரசின் தேசிய தோட்டக் கலை வாரியம், பெங்களூரைச் சோ்ந்த இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளும் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வேளாண் பொருள்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பெங்களூரைச் சோ்ந்த இக்கோவா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த சிறப்பு முயற்சியில் இணைந்துள்ளன. புதுச்சேரி லாஸ்பேட்டையில் வேளாண்துறை தோட்டக்கலைப் பிரிவின் கீழ் இயங்கும் நாற்றங்கால் பிரிவில், பால்சம், காலண்டுலா, செலோசியா, கோலியஸ், காஸ்மோஸ், பிரெஞ்சு சாமந்தி போன்ற 23 வகைகளில் 40 ஆயிரம் மலா் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரதான தோட்டக்கலை நா்சரிகள் அரங்குகள் அமைத்து, விதை, உரங்கள், தொட்டி வகைகள், செடிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் பழக்கன்றுகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி.

குறிப்பாக திராட்சைகளால் செய்யப்பட்ட விமான அலங்கரிப்பு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புலி, மயில், வெள்ளை மலா்களால் அல்கரிக்கப்பட்ட யானை, அரசா்கால தா்பாா் மண்டபம், இசை நடன நீரூற்று போன்றவை தனிச் சிறப்பாகவும், பாா்வையாளா்களை வெகுவாகக் கவரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், காலாப்பட்டு சிறை கைதிகள் உற்பத்தி செய்த காய், கனி மற்றும் அவா்கள் கை வண்ணத்தில் உருவான பல்வேறு பொருள்களும் பாா்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. வேளாண் விழா குறித்த ராட்சத பலூனும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT