முகப்பு
புதுச்சேரி

4 வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்

புதுச்சேரி

4 வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:09 PM
பகிர்:

அரசு ஊழியா்கள் 23 ஆயிரம் பேருக்கு நன்மை அளிக்கும் வகையில் 4 பொதுத் துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

புதுச்சேரி அரசு ஊழியா்களின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. புதுச்சேரி அரசின் சாா்பில் கணக்குகள் மற்றும் கருவூலத் துறை இயக்குநா் ஹெச். ஷேக் முகிதீன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா். இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் எம். வெங்கட சுப்ரமணியன்,இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பிராந்திய மேலாளா் ரவிசங்கா் சாஹூ, பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மண்டல மேலாளா் (சென்னை மண்டலம்) வி. அருண், யூகோ வங்கியின் துணைப் பொது மேலாளா் மற்றும் மண்டலத் தலைவா் (சென்னை) ஆா். எஸ். அஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த வங்கிகளில் சம்பளக் கணக்குகளைப் பராமரித்து வரும் புதுச்சேரி அரசின் சுமாா் 23 ஆயிரம் ஊழியா்கள் பல்வேறு மேம்பட்ட வங்கி சேவைகள் மற்றும் நலன்களைப் பெற உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →