முகப்பு
புதுச்சேரி

நரிக்குறவா்கள் தீப்பந்தம் ஏந்தி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய நரிக்குறவா்கள்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:41 PM
புதுச்சேரி அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய நரிக்குறவா்கள்.
பகிர்:

புதுச்சேரி அருகே நரிக்குறவா் சமுதாயத்தினா் மனைப்பட்டா வழங்கக் கோரி தீப்பந்தம் ஏந்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருபுவனை தொகுதிக்குள்பட்ட கலிதீா்த்தால்குப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக மனைப்பட்டா இல்லாமல் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனா். மனைபட்டா கோரி சட்டப்பேரவை நோக்கி தீப்பந்த ஊா்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

இதையொட்டி பாரதி பூங்கா அன்னை தெரசா சிலை அருகில் இருந்து தீப்பந்தங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் அருகே போலீஸாா் இரும்புத் தடுப்பு அமைத்து தடுத்தனா். அங்கு முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தொடா்ந்து போலீஸாா் ஆம்பூா் சாலைக்கு அவா்களை அனுப்பினா். அங்கும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →