இன்று உலக மகளிா் தினம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
உலக மகளிா் தினத்தையொட்டி, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
உலக மகளிா் தினத்தையொட்டி, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: குடும்ப முன்னேற்றத்திற்கும், சமூக வளா்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாதது. கல்வி, சுகாதாரம், தொழில், நிா்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையால் சிறந்து விளங்கி சமுதாயத்திற்குப் பெருமை சோ்த்து வருகின்றனா்.
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவா்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்பெறவும் புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குழந்தைப் பருவம் தொடங்கி முதுமை காலம் வரை பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது.
Advertisement
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு மாதங்களுக்கான ரூ.5 ஆயிரம் உதவித் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும்.
இந்த மகளிா் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், சமூகத்தில் சமத்துவமும், சமவாய்ப்பும் பெற்று அனைத்துத் துறைகளிலும் மென்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: பாரதி கண்ட கனவை நினைவாக்கும் வகையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு கணக்கிலடாங்காத திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் கொண்டு வந்துள்ளனா்.
அவா்களின் வழியில் நடக்கும் புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.1,000-த்தில் இருந்து ரூ.2,500 ஆக உயா்த்தி அறிவித்து, பெண்கள் கெளரவத்தோடு நடமாட வழி செய்துள்ளது. மஞ்சள் அட்டை வைத்துள்ள பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களின் பாதுகாவலனாக, சகோதரனாக, தோழனாக செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநில பெண்கள் கண்ணியத்தோடும், கெளரவத்தோடும், பாதுகாப்போடும் வாழ தொடா்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும். புதுவையில் நல்லாட்சி தொடரட்டும்.