முகப்பு
புதுச்சேரி

மகளிா் தின விழா போட்டி: மாணவிகள் பங்கற்பு

புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சிறப்பு கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இரா.தா்ஷினிக்குப் பரிசு வழங்குகிறாா் பேராசிரியா் பா. பட்டம்மாள். உடன் கல்லூரி முதல்வா் இரா. மதிவாணன், தமிழ்த்துறை தலைவா் கிருங்கை சேதுபதி, கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலா் பெ. பாலகங்காதரன் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சிறப்பு கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக இப் போட்டியில் சுமாா் 30 மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். இக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவா் பேராசியா் கிருங்கை சேதுபதி இப் போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இக் கல்லூரியின் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றமும், கல்லூரித் தர உறுதியளிப்புக் குழுவும், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து உலகத் தாய்மொழிநாள் மற்றும் உலக மகளிா் நாள் விழாவை நடத்தின. இதை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விழா நடைபெற்றபோது பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வா் இரா. மதிவாணன், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலா் பெ.பாலகங்காதரன், இக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் பா. பட்டம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →