முகப்பு
புதுச்சேரி

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 7:54 PM
இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்
பகிர்:

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி செயல்படும் கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளா் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் அய்யாவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.