புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கை
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையவிருப்பதாக பிரதமர் மோடி நம்பிக்கை
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பூத் அளவிலான தொண்டர்களிடம் உரையாடவிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டை என்ஜின் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும், புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை ஆசிர்வதிக்கவிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
வரும் 30 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் என்னுடைய பூத் வலிமையான பூத் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
நமோ செயலி வாயிலாக, என்னுடைய பூத் வலிமையான பூத் - புதுச்சேரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பூத் அளவிலான தொண்டர்கள் உரையாடுவதுடன், யோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புதுச்சேரியின் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.