புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்பு! பிரதமர் மோடி வாழ்த்து!
புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்றுள்ள என். ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்....
புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்றுள்ள என். ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 5 ஆவது முறை புதுச்சேரியின் முதல்வராக என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி இன்று (மே 13) பதவியேற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் என். ரங்கசாமிக்கு புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்றுள்ள என். ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
“புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துகள். புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்தியுள்ள அனுபவம் வாய்ந்த, திறமையான நிர்வாகியாக அவர் முத்திரை பதித்துள்ளார்.
மக்களின் நலனுக்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய எனது நல்வாழ்த்துகள்” எனக் கூறப்பட்டுள்ளது.
PM Modi has extended his congratulations to N. Rangasamy, who has assumed office as the Chief Minister of Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.