காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணி: அதிமுக வேட்பாளா் அன்பழகன்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்று உப்பளம் தொகுதி வேட்பாளரும், மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் கூறினாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுக சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்று உப்பளம் தொகுதி வேட்பாளரும், மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் கூறினாா்.
புதுச்சேரி உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடையாா் தோட்டம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தபோது அன்பழகன் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுகவினா் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளனா். புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லை என்றால் திமுக கிடையாது.
உப்பளம் தொகுதியில் உள்ள உடையாா் தோட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பட்டாவும், கூரை வீடுகளைக் கல்வீடாகவும் கட்டிக்கொடுத்தேன் என்றாா்.