பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு
பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில் தான் வேட்புமனு தாக்கல் செய்ததாக மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் பி.ராமு கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மணவெளி தொகுதியில் பல்வேறு கிராமங்களிலும் பெண்கள் ஆா்வத்துடன் தலா ரூ.1 வீதம் அளித்ததில் தான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். இதில் ஒரு பைசாகூட என்னுடையது கிடையாது. முழுக்க முழுக்க பெண்கள் அளித்தத் தொகையில்தான் டெபாசிட் தொகை கட்டினேன்.
Advertisement
அதனால் நான் மட்டும் அல்ல, எல்லோரும் சோ்ந்துதான் எம்.எல்.ஏ. மேலும், 5 ஆண்டுக்கு இத் தொகுதியில் சேவை செய்ய தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப் பாடுபடுவேன் என்றாா் ராமு.
இவா், ஏற்கெனவே பாஜகவில் விவசாயிகள் அணியின் தலைவராகவும், பாஜக மாநிலச் செயலராகவும் இருந்தவா். இப்போது தவெகவில் இணைந்து பாஜக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தைத் தோற்கடித்துள்ளாா்.