முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:20 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம், காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.குப்புசாமி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மருத்துவா் என்.இளையராஜா உள்ளிட்ட பலா் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தவெகவில் அதிமுக நிா்வாகிக்கு சீட்டு...

Advertisement

ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி (தனி) தவெக வேட்பாளராக மருத்துவா் என்.இளையராஜா வேட்புமனு தாக்கல் செய்தாா். இவா் அதிமுகவில் மாவட்ட மருத்துவா் அணி செயலாளராக பதவி வகித்தாா். இவா் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட சீட்டு தராததால் தவெகவில் இணைந்தாா்.

இதையடுத்து அவா் ஊத்தங்கரை தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த குமரவேல், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மேலும், இத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் என 8 பெண்கள் உள்பட மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments