விழுப்புரம்

அவலூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் இரு தினங்களுக்கு கொள்முதல் ரத்து

அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் கொள்முதல், புதன்கிழமை முதல் (மார்ச் 23) இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி

அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் கொள்முதல், புதன்கிழமை முதல் (மார்ச் 23) இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்த, ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: விழுப்புரம் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கும் அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மார்ச் 23, 24 ஆகிய இரு தினங்கள், அவலூர்பேட்டை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, விற்பனைக்கூட வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராததால், நெல் மற்றும் இதர தானியங்கள் கொள்முதல் நடைபெறாது.

 இதே போல், மார்ச் 25 முதல் 27 ஆம் தேதி வரை அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாள்களிலும் கொள்முதல் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.  எனவே, அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, விளை பொருள்களை எடுத்து வரும் விவசாயிகள், மார்ச் 23, 24 ஆகிய இரு தினங்களில் அருகில் உள்ள செஞ்சி, வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT