விழுப்புரம்

சிறந்த ஊராட்சித் தலைவருக்கான விருது அளிப்பு

DIN

கண்டாச்சிபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு, மத்திய அரசின் சிறந்த ஊராட்சித் தலைவருக்கான விருது அண்மையில் வழங்கப்பட்டது.
கண்டாச்சிபுரம் கிராம ஊராட்சியில் 2011} 16 ஆம் ஆண்டுகளில் ஊராட்சித் தலைவராக இருந்த என்.கண்ணாயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுக்காக அவரை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் இணைந்து பரிந்துரை செய்தது.
இதையடுத்து, கடந்த 3}ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில், கண்டாச்சிபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் என்.கண்ணாயிரத்துக்கு சிறந்த ஊராட்சித் தலைவருக்கான விருதை மத்திய சமூகப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால்குர்ஜார் வழங்கினார். அப்போது, தமிழ்நாடு கிராம ஊராட்சித் தலைவர்கள் சங்க மாநிலத் தலைவர் முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT