விழுப்புரம்

நலத் திட்ட உதவிகளை வழங்க வலியுறுத்தி ஆட்சியரகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்

தினமணி

திண்டிவனம் அருகே கிராமத்தினருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
 திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை அருகே உள்ள வடசிறுவலூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (50), காங்கிரஸ் பிரமுகர். இவர் திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.
 குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாததால், திடீரென ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
 அப்போது, அவர் கூறியதாவது: வடசிறுவலூரில் சகாதேவன் மகள் கலையரசி, சேகர் மகள் மணியம்மாள், விஜயன் மகள் கலைச்செல்வி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திருமண உதவித் தொகை கோரி விண்ணப்பித்து இரு ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை.
 இதேபோல, அதே கிராமத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த 15-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 12 வாரங்களாக கூலித் தொகை வழங்கப்படவில்லை.
 இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். அதனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.
 அவரை அங்கிருந்த உதவி ஆய்வாளர் மருதப்பன் மற்றும் போலீஸார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT