விழுப்புரம்

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும்: முதன்மைக் கல்வி அலுவலர்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி நிலை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 91.81 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 3.74 சதவீதம் அதிகம். 67 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 165 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
முதல் மூன்று இடங்கள் என்று மாணவர்களின் தேர்ச்சி நிலையை தரம் பிரித்து, பிற மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாதென புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இதுபோன்ற விளம்பரங்களையும் தவிர்க்க வேண்டும் என்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறிச் செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசுப் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவுக்கான காரணங்கள் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தொடர்ந்து, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT