முகப்பு
விழுப்புரம்

லாரி மீது கார் மோதல்: ஓய்வு பெற்ற ஆட்சியர் காயம்

சின்னசேலத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர், அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சின்னசேலத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர், அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.
 சென்னையைச் சேர்ந்த நைனாமலை மகன் கோவிந்தன்(60). கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், புதன்கிழமை சென்னையிலிருந்து, நாமக்கல் நோக்கி காரில் சென்றார். இரவு 9 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் புறவழிச்சாலை அருகே சென்றபோது, அதே சாலையில், முள்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், கோவிந்தன், அவரது மனைவி தேன்மொழி(50). கார் ஓட்டுநர் ஆறுமுகம், ஆகியோர் காயமடைந்தனர். உடனே அவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முதலுதவிக்குப் பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, சின்னசேலம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →