முகப்பு
விழுப்புரம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கடந்தாண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் செஞ்சி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

கடந்தாண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் செஞ்சி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தினகரன் வரவேற்றார்.
காங்கிரஸ் தேசிய வழக்குரைஞர் ஆர்.பூபதி, வட்டாரத் தலைவர்கள் செஞ்சி சரவணன், வல்லம் கலைச்செல்வன், மேல்மலையனூர் ராஜவேலாயுதம், தொழில்சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலர் பீரங்கிமேடுபழனி, கோணை ராஜா, வட்டாரத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் செய்யாறு எம்எல்ஏவும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.விஷ்ணுபிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கூட்டத்தில் வழக்குரைஞர் சுப்பையா, காணை சுரேஷ், நெடுமொழி கண்ணன், மயிலம் கோவிந்தன், விவசாய அணி ஜோலாதாஸ், முருகானந்தம், அந்தோணிமேரி, ஊடகத் தலைவர் ரமேஷ் , எலக்ட்ரிக் சரவணன் உள்பட காங்கிரஸார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.எஸ்.ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.ன்.ஆர்.குமார், மாவட்ட துணைத் தலைவர் என்.மாரியாப்பிள்ளை, தியாகதுருகம் வட்டாரத் தலைவர் கொளஞ்சியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் ஜி.இளவரசன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட துணைத் தலைவர் முத்தமிழ் கண்ணன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயப் பிரிவு மாநிலச் செயலர் ராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், கே.வி.முருகன், வீரமுத்து, குணசேகரன், மாவட்டப் பொருளாளர் பசீர்பாய், முன்னாள் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் மாத்தூர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர துணைத் தலைவர் பிரகாஷ்  நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →