விழுப்புரம்

பேருந்தில் நகைக் கடை ஊழியரிடம் 50 பவுன் திருட்டு

தினமணி

மரக்காணம் அருகே பேருந்தில் நகைக் கடை ஊழியரிடம் 50 பவுன் நகைகள் திருடப்பட்டது. இதுதொடர்பாக பெண் பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
 சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(46). சௌகார்பேட்டையில் உள்ள நகைக் கடை ஒன்றில் பணிபுரிகிறார். இவர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் ஆர்டர் கொடுத்த நகைகளைக் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.
 அதேபோல, திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து மரக்காணத்துக்கு பேருந்தில் வந்து இறங்கினார். பையில், ஒரு கிலோ எடையுள்ள நகைகளை எடுத்து வந்திருந்த அவர், அதன்பிறகு அங்கிருந்து திண்டிவனம் செல்ல பேருந்தில் ஏறினார். கூட்டமாக இருந்த அந்தப் பேருந்தில், இடம் கிடைத்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவரது அருகில் நின்றிருந்த பெண், தனக்கு தலைவலிப்பதாகக் கூறி, அமர இடம் கேட்டுள்ளார். அதனை நம்பி, அந்த பெண்ணுக்கு இருக்கையை கொடுத்து விட்டு, விஸ்வநாதன் எழுந்து நின்றார். அப்போது, விஸ்வநாதன் தனது நகைப் பையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பிரம்மதேசம் வந்ததும், அந்த பெண் நகைப் பையை விஸ்வநாதனிடம் கொடுத்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றார். இதையடுத்து, திண்டிவனத்தில் இறங்கிய விஸ்வநாதன் நகைக்கடைக்கு சென்று, தனது பையை திறந்து பார்த்தபோது, அதில், 50 பவுன் நகைகள் காணவில்லையாம். அதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும். இதுகுறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT