விழுப்புரம்

பறிமுதல் செய்யப்பட்ட 17 ஆயிரம் மதுப் புட்டிகள் அழிப்பு

DIN

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 17 ஆயிரம் மதுப்புட்டிகள் மரக்காணம் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அழிக்கப்பட்டன.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்துக்குள் கடத்தி வரப்படும் மதுப்புட்டிகளை சோதனைச்சாவடிகளில் மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட மரக்காணம், வானூர், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுமார் 17 ஆயிரம் மதுப் புட்டிகளை மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஹரிகரன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மரக்காணத்தை அடுத்த தீர்த்தவாரி கடல் பகுதி அருகிலுள்ள சாலையில் கொட்டிபொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து நொறுக்கி அழித்தனர். அழிக்கப்பட்ட மதுப்புட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம். பின்னர், அழிக்கப்பட்ட புட்டிகளை அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT