விழுப்புரம்

ஜவுளிக் கடைகளில் வருமான வரி சோதனை

தினமணி

பண்ருட்டி, கள்ளக் குறிச்சியில் உள்ள ஜவுளிக் கடைகளில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சாலையில் இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமான இரண்டு ஜவுளிக் கடைகளில் கடலூர் வருமான வரித் துறை அதிகாரி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை காலையில் சென்று, கடையின் கதவுகளை மூடிக்கொண்டு சோதனை மேற்கொண்டனர்.
 இந்தச் சோதனையானது இரவு 7 மணியைக் கடந்தும் தொடர்ந்தது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.
 கள்ளக்குறிச்சியிலும்...இதேபோல, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக கள்ளக்குறிச்சியில், சேலம் நெடுஞ்சாலையில் உள்ள கடையிலும் காலை 9.30 மணி முதல் வருமான
 வரித் துறையினர்ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT