உளுந்தூர்பேட்டையில் பாஜக கொடியேற்று விழா
உளுந்தூர்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட (சட்டப்பிரிவு) தலைவர் எஸ்.சத்தியசீலன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சௌ.பக்கிரிசாமி, கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி க.குருமூர்த்தி வரவேற்றார்.
விருத்தாசலம் சாலை சந்திப்பில் கட்சிக்கொடியை மாநில பொதுச்செயலர் மாவீரன் கருப்பு (எ) முருகானந்தம் ஏற்றி வைத்து பேசினார் .
அவர் பேசுகையில், அடுத்த மாதம் இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தி, காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வழிவகை செய்யும். அதேபோல விவசாயிகளின் பிரச்னையையும் தீர்த்து வைக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஒபிசி அணி மாநில துணைத் தலைவர் கே.மனோகரன், கோட்ட இணை பொறுப்பாளர் வி.அருள், மாவட்ட நிர்வாகிகள் ராமர், தாமோதரன், முருகானந்தம், ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நகர துணை தலைவர் மருது நன்றி கூறினார்.