குபேர்-சித்ரலேகா திருக்கல்யாணம்
திண்டிவனத்தை அடுத்த மொளசூரில் அமைந்துள்ள லஷ்மி குபேர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
விழுப்புரம்குபேர்-சித்ரலேகா திருக்கல்யாணம்
திண்டிவனத்தை அடுத்த மொளசூரில் அமைந்துள்ள லஷ்மி குபேர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
திண்டிவனத்தை அடுத்த மொளசூரில் அமைந்துள்ள லஷ்மி குபேர் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
காலை 7 மணி அளவில் மங்கள வாத்தியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, திருமஞ்சணம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 முதல் 7.30 மணி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் குபேரன் மணமகன் கோலத்திலும் சித்ரலேகா மணப்பெண் கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராக பைரவி கலைக்கூட மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜயலட்சுமி குபேர டிரஸ்ட் தலைவர் குபேர முருகன் செய்திருந்தார்.