திருக்கோவலூர் தமிழ்ச் சங்க விழா
திருக்கோவலூர் தமிழ்ச் சங்கமும், தமிழ்நாடு அனைத்து நிலை ஆசிரியர் சங்கமும் இணைந்து நாற்பெரு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவலூர் தமிழ்ச் சங்கமும், தமிழ்நாடு அனைத்து நிலை ஆசிரியர் சங்கமும் இணைந்து நாற்பெரு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொல்காப்பியர் 2,729-ஆவது பிறந்த நாள், ஆய்வுநூல் வெளியீடு, பணி நிறைவுபெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு, கபிலர் தொடர் ஆய்வரங்கம் ஆகியவை நாற்பெரு விழாவாக
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.
சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், நட்சத்திர நன்னெறி மன்றத் தலைவர் அ.முகமத்ரபி, ஆசிரியர் சங்க பொதுச் செயலர் எஸ்.குருராஜன், திருக்குறள் கழக அறக்கட்டளை துணைத் தலைவர் விளந்தை அ.சண்முகம், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பா.திருஞானசம்பந்தம், வரலாற்று ஆய்வாளர் துரைமலையமான் எழுதிய தொல்காப்பியம் தகவல்கள் ஆயிரம் என்ற தலைப்பிலான நூலை வெளியிட, சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். நூலாசிரியருக்கு வரலாற்று ஆய்வறிஞர் எனும் விருது வழங்கப்பட்டது.
பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர்கள் எஸ்.சுரேஷ்பாபு, கிறிஸ்தோப் இஸ்ரேல், வை.கார்த்திகேயன், வீர.நாராயணன், முதுகலை ஆசிரியர்கள் டி.பாண்டியன், க.நவநீதஞானராஜ், எம்.இராமலிங்கம், பா,குப்பன், எஸ்.சூசைமேரி, முனைவர் தெ.சாந்தகுமார் ஆகியோருக்கு ஆசிரிய மாமணி விருது வழங்கப்பட்டது.
பாட்டுரைப் பாவலர் பெண்ணைவளவன், தலைமை ஆசிரியர்கள் ந.இராமர், அ.லூர்துசாமி, கு.நெடுஞ்செழியன், ஆசிரியர்கள் எஸ்.இரவிச்சந்திரன், அரங்க.குணசேகரன், கா.கார்த்திகேயன், க.முரளி, மணி ஆகியோர் தொல்காப்பியம் தகவல்கள் ஆயிரம் என்ற நூலை ஆய்வு செய்து பேசினர். கபிலரின் கற்பனைத் திறன் என்ற தலைப்பில் நெடுமானூர் கவிஞர் இரா.கதிர்வேல் ஆய்வுரை ஆற்றினார்.
தமிழ்ச் சங்க செயலர் பாரதிமணாளன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சங்க அமைப்புச் செயலர் பீ.அய்யனார் நன்றி கூறினார்.