பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி
பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம்பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி
பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் ம.மார்கிரேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை ஆசிரியை அ.கற்பகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி டிஎஸ்பி வி.கோமதி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்தும், குழந்தை வருமானம் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவமானம் என்பது குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஆசிரியை ஆ.சத்தியபிரியா, ஜெயந்தி, உடல்கல்வி ஆசிரியர் இ.சந்தீஷ் உள்ளிட்ட ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பின்னர் பள்ளியை வந்தடைந்தது.