அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்.14-இல் கொடியேற்றம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாள்கள் நடைபெறுகிறது.
விழுப்புரம்அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்.14-இல் கொடியேற்றம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாள்கள் நடைபெறுகிறது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 15-ஆம் தேதி மயானக் கொள்ளை விழாவும், 18-ஆம் தேதி தீ மிதி விழாவும், 20-ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவமும் நடைபெறுகிறது.
மாசித் திருவிழா தேர் ஆண்டுதோறும் புதிதாக பல்வேறு மரங்களைக் கொண்டு செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோயில் பரம்பரை ஆச்சாரி கிருஷ்ணன் கூறியதாவது: ஆண்டுதோறும் புதிதாக தேரைச் செய்வதற்கு சுமார் 40 டன் பச்சை மரங்கள் தேவைப்படுகின்றன. இதில், முக்கிய பங்கு வகிக்கும் மரம் பனை மரமாகும். 50 பனை மரங்களைக் கொண்டு தேர் செய்யப்படுகிறது. மேலும் புளிய மரம், காட்டுவா மரம் ஆகியவற்றைக் கொண்டு தேர் செய்யப்படுகிறது .
இந்தத் தேரைச் செய்ய சுமார் 20 நாள்கள் ஆகும். இதற்காக சுமார் 50 பேர் இரவும் பகலுமாக பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சி.ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.