பள்ளி ஆண்டு விளையாட்டு விழா
திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் ராஜ ராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் ராஜ ராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளர் பத்மாவதி தலைமை வகித்தார். அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான கார்த்திக், பள்ளி நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால் விழாவைத் தொடக்கி வைத்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.
பள்ளியின் நிறுவனர் ராஜ ராஜேஸ்வரி சித்தர் பீடம் ரகுராம அடிகளார் அருளாசி வழங்கி, வாழ்த்துரைத்தார்.
மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் திருமலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.