கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
விழுப்புரம் அருகே செல்லிடப்பேசியில் தவறுதலாக வந்த அழைப்பின் மூலம் பழக்கமான கல்லூரி மாணவியை, கர்ப்பமாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே செல்லிடப்பேசியில் தவறுதலாக வந்த அழைப்பின் மூலம் பழக்கமான கல்லூரி மாணவியை, கர்ப்பமாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு, செல்லிடப்பேசியில் தவறுதலாக வந்த அழைப்பு மூலம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தேவியாக்குறிச்சியைச் சேர்ந்த பொண்ணுசாமி மகன் குமரேசன்(36) பழக்கமானார். இருவர் இடையே காதல் ஏற்பட்டு தனிமையில் சந்தித்துப் பேசி, நெருக்கமாகப் பழகி வந்தனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
8 மாதம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமரேசனை மாணவி வற்புறுத்தியுள்ளார். அதற்கு, மறுப்பு தெரிவித்த குமரேசன், மாணவியுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டு தலைமறைவானாராம். இதன்பிறகு, மாணவி விசாரித்ததில், குமரேசன் ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரிய வந்ததாம். பின்னர், இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், குமரேசனை சனிக்கிழமை கைது செய்தனர்.