வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், கணையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரப் பெண் சுகந்தி (28) மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டின் பின்பக்கத் கதவைத் திறந்த வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிந்த சுகந்தி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.