முகப்பு
விழுப்புரம்

ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 3 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 3 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.
 விழுப்புரம் அருகே கஞ்சனூரை அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவரது மூன்றரை வயது மகன் விமல். புதன்கிழமை காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த விமலை காணவில்லை.
 உறவினர்கள் விசாரித்தபோது, அப்பகுதி சிறுவர்களுடன் விமல் அங்குள்ள ஏரிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஏரியில் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது, நீரில் மூழ்கிக் கிடந்த விமலை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.