விழுப்புரம்

திராவிடத்தை அவமதித்து விட்டார் கமல்: பொன். ராதாகிருஷ்ணன் 

தினமணி

தமிழகத்தைப் பற்றி தெரியாத கேஜரிவாலை அழைத்து கட்சியைத் தொடங்கியதன் மூலம் திராவிடத்தை கமல் அவமதித்து விட்டார் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 ஆரோவில் பகுதிக்கு வருகிற 25-ஆம் தேதி பிரதமர் மோடி வருவதையொட்டி, ஏற்பாடுகள் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பிரதமர் மோடி சனிக்கிழமை (பிப்.24) தமிழகம் வருகிறார்.
 25-ஆம் தேதி ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்கிறார். விழுப்புரம் மாவட்ட பகுதியான ஆரோவிலுக்கு பிரதமர் வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
 கமல் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். தமிழ், தமிழகம், திராவிடத்தை பற்றி தெரியாத கேஜரிவாலை அழைத்து அவர் கட்சி தொடங்கியிருப்பது, திராவிடத்துக்கும், தமிழகத்துக்கும் அவமானம்.
 தில்லியில் உள்ள தமிழர்களுக்குக்கூட கேஜரிவால் உதவியது இல்லை.
 பிற மாநில தலைவர்கள் சொல்லித்தான் தமிழகத்தை முன்னேற்ற முடியுமா? தமிழக வளர்ச்சிக்கு பிற மாநிலத்தின் உதவியை கோருவது தவறில்லை.
 இங்கே அரசியல் செய்வதற்கு வெளிநபர்கள் ஆலோசனை ஏற்புடையதாகுமா? காகிதத்தால் ஆன விதையாகத்தான் கமல் எனக்குத் தெரிகிறார்.
 யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்பதை பார்க்க வேண்டும்.
 தமிழகத்தில் பிரதமரின் செல்வாக்கு மூலம் பாஜகவும் வளர்கிறது. தமிழ் மீதும், தமிழர்கள் மீது அன்புகொண்டவர் பிரதமர்.
 எந்த பிரதமரும் செய்யாத வகையில், உலகில் சிறந்த மொழி தமிழ் என்று வெளி மாநிலங்களில் தமிழர்களின் பெருமையை பிரதமர் மோடி பேசி வருகிறார்.
 பிரதமர் மோடி மாற்றுக் கட்சியின் அரசியல் விஷயத்தில் தலையிடாதவர்.
 ஓ.பி.எஸ். தெரிவித்ததைப் போல, அரசியல் பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
 காவிரி நதிநீர்ப் பங்கீடு தீர்ப்பு நமக்கு திருப்தியாக இல்லை. அதே நேரத்தில் தீர்ப்பை உதாசீனப்படுத்த முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT