விழுப்புரம்

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

தினமணி

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுப்ப ணிக்கான, தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 திண்டிவனம் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 73 மையங்களுக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கலந்து கொண்டு, தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கிப் பேசினார்.
 திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பா.ரவி, மாவட்டக் கல்வி அலுவலர் (பயிற்சி) கிருஷ்ணபிரியா, பள்ளித்துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், செஞ்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் அ.திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT