விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது 

தினமணி

கள்ளக்குறிச்சி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
 கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை நேப்ஹால் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் மருத்துவமனை முன் மோட்டார் சைக்கிள்கள் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் போலீஸாரைக் கண்டதும் பதுங்க ஆரம்பித்தார். அவரை போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 அதில், அந்த இளைஞர் கள்ளக்குறிச்சி ராஜாம்மாள் நகரைச் சேர்ந்த சுமார் 18 வயது இளைஞர் என்பது தெரிய வந்தது. அவர் கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், கடந்த16ஆம் தேதி சுந்தர விநாயகர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கடலூர் இளஞ்சிறார் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT