விழுப்புரம்

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தினமணி

விழுப்புரத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் பொது நல அமைப்புகள் மற்றும் கட்சியினர் திங்கள்கிழமை திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் குபேரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொருளாளர் சின்னையா, ஆறுமுகம், பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 தொடர்ந்து, சமூகசேவை கல்வி பொருளாதார வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் வள்ளுவர் குல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். அமைப்பாளர் தனசேகரன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் தயாளன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 நாகராஜ், வில்சன், சாந்தராஜா, சூரியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர், பல்வேறு அமைப்பினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 வானூர்: திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பேருந்து நிலையத்தில், ஒன்றிய பாஜக சார்பில் திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றியச் செயலர் தங்க.சிவக்குமார் தலைமையில் பாஜகவினர் கலந்துகொண்டனர்.
 மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர் ராமச்சந்திரன், வணிகரணி மாவட்டத் தலைவர் மூர்த்தி, தமிழ் வளர்ச்சிப் பிரிவு நிர்வாகிகள் வரதராஜன், பாலு, சித்தர் சிவஞானி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT