முகப்பு
விழுப்புரம்

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து 10 பவுன் திருட்டு

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து10 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

கோட்டக்குப்பம் அருகே வீடு புகுந்து10 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு, கெங்கை நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(35). இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி பத்மாவதி(30). இவர், ஞாயிறுக்கிழமை இரவு காற்றுக்காக, வீட்டின் மாடியில் தூங்கினார். இவரது உறவினர்கள் வீட்டினுள் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர். 
காலையில் பத்மாவதி எழுந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் எனக் கூறப்படுகிறது. மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடிக் கொண்டு தப்பியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் நேரில் வந்து பார்வையிட்டதுடன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →